Learning Tamil Through Songs
பாடல்வழித் தமிழ் கற்றல்
Format: Sharing

Ms Prasana Ramesh (திருவாட்டி பிரசன்னா ரமேஷ் )
CHIJ Kellock Primary School
சி ஹெச் ஐ சே கேலோக் தொடக்கப்பள்ளி
Ms Prasana Ramesh completed her degree in accounting in the University of Tasmania and MBA at the University of Hull. She had previously worked at the Accounting and Corporate Regulatory Authority of Singapore (ACRA) as Unit Head of Operations till 2011 before switching to teaching, her original passion. She is currently teaching English and Mathematics at CHIJ Kellock. Prasana started singing at the age of 14 in television with the then-Singapore Broadcasting Corporation (SBC) while she was still in secondary school. Her 30-year journey singing in Vasantham continues to this day. Her interest in music has definitely assisted her in developing her expertise in Tamil. Despite having Malayalam as her mother tongue, Prasana has gone on to learn Tamil and, through the use of Tamil songs, continued to teach Tamil to her children. This strategy of using songs in teaching Tamil has shown a huge improvement in her children’s language acquisition. She is currently sending her children to learn Tamil music so as to further improve their language skills.
திருவாட்டி பிரசன்னா ரமேஷ், கணக்கியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர். கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தில் (அக்ரா) 2011-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துவந்தார். ஆசிரியப் பணியின் மீது கொண்டுள்ள ஆர்வத்தின் பொருட்டும் கல்வியில் பிள்ளைகளுக்கு வழிகாட்டி உதவ வேண்டும் என்ற காரணத்தாலும் ஆசிரியப்பணியைத் தேர்ந்தெடுத்தார். தற்பொழுது, சி ஹெச் ஐ ஜே கேலோக் தொடக்கப்பள்ளியில் ஆங்கிலம், கணிதம் கற்பித்து வருகிறார். பதினான்கு வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடத்தொடங்கிய திருவாட்டி பிரசன்னா, வசந்தம் ஒளிவழியில் இன்றும் தொடர்ந்து பாடிவருகிறார். பாடகராக முப்பது ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கிறார். தமிழ்ப்பாடல்கள் மீது இவருக்கு இருந்த ஆர்வம் அவரது தமிழ்க்கல்வி மேம்பபாட்டிற்கும் வழிவகுத்ததாகக் கூறுகிறார். மலையாள மொழியைத் தன் தாய்மொழியாகக் கொண்ட இவர், தமிழ்ப்பாடல்கள் தம்முடைய தமிழ்மொழி ஆற்றலை வளர்க்கப் பேருதவி புரிந்திருக்கின்றன என்று அறுதியிட்டுக் கூறுகிறார். அதன் அடிப்படையில், தம் பிள்ளைகளுக்கும் பாடல்கள்வழியே தமிழ்மொழியைக் கற்றுக்கொடுத்துவருகிறார். அது அவரது பிள்ளைகளின் தமிழ்மொழியாற்றலை மேம்படுத்தியதால், அவர்களைத் தமிழ் இசை வகுப்புகளுக்கும் தொடர்ந்து அனுப்பிவருகிறார்.
Mr Elamaran Natarajan (திரு இளமாறன் நடராஜன் )
Holy Innocents’ High School
ஹோலி இனசன்ஸ் மேல்நிலைப் பள்ளி
Mr Elamaran is a Senior Education Officer who has been in the teaching service for 20 years. He specialises in teaching History and has designed and conducted many lessons and learning journeys in making History engaging and interesting to the students. He presented at the MOE Excel Fest in 2007 and 2012, and was also one of the final 8 teachers for the Outstanding History Teacher Award in 2011 organised by the Singapore History Society. He also has a keen interest in Tamil Language, his mother tongue. He had participated in the MTL Symposium in 2016 where he conducted workshops to help make the learning of Tamil fun for children. Well-known at Medicorp Vasantham for his excellent singing, Elamaran is a father of three young children who enjoys teaching Tamil through songs and various fun ways.
திரு இளமாறன் ஆசிரியப்பணியில் இருபதாண்டுகள் அனுபவம் பெற்ற மூத்த ஆசிரியர். வரலாற்றுப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்றவரான இவர், மாணவர்களைப் பயன்முனைப்புமிக்க வகையில் கற்றலில் ஈடுபடுத்தக் கற்றல் பயணம் உள்ளிட்ட பல அணுகுமுறைகளைக் கையாண்டு வெற்றிகண்டவர். இவர், கல்வி அமைச்சின் எக்ஸல் ஃபெஸ்ட்-இல்(EXCEL Fest) 2007 மற்றும் 2012-இல் கற்றல் கற்பித்தல் தொடர்பாகவும் பயிற்றுவளங்கள் தொடர்பாகவும் பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும், இவர் 2011-இல் எட்டுத் தலைசிறந்த வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவராகச் சிங்கப்பூர் வரலாற்றுச் சமூகத்தினரால் (Singapore History Society) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வரலாற்று ஆசிரியராக இருப்பினும், அவர் தம் தாய்மொழியான தமிழ்மொழியின்பால் அதிகப் பற்றுக்கொண்டவர். தமிழ்மொழியின்மீதுள்ள ஆர்வத்தினாலும் சிறந்த குரல்வளத்தினாலும், வசந்தம் ஒளிவழியில் இன்றும் தொடர்ந்து பாடகராக வலம்வந்துகொண்டிருகிறார். தம் மூன்று பிள்ளைகளுக்குப் பாடல் வழியே தமிழ்மொழியைக் கற்பித்து வருகிறார். இவர் 2016 –ஆம் ஆண்டும் தாய்மொழிகளின் கருத்தரங்கில் பங்கெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mdm S Seethalaksmy (திருமதி சீதாலட்சுமி)
Curriculum Planning and Development Division, Ministry of Education
பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவு, கல்வி அமைச்சு
Mdm Seethalaksmy is a Senior Specialist for Tamil Language at the Curriculum Planning and Development Division, Ministry of Education. Mdm Seethalaksmy was one of the lead officers in developing the 2015 TL Primary Curriculum and related teaching resources. She has presented at the 11th World Tamil Teacher’s Conference on the Singapore Tamil Language Curriculum, and has conducted workshops at various platforms pertaining to the TL Primary Curriculum. Prior to her stint in MOE, she was a Head of Department in Xingnan Primary school with 30 years of experience in teaching Tamil in both primary and secondary schools.
திருவாட்டி சீதாலட்சுமி அவர்கள் கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவின் தமிழ்மொழிப் பகுதியின் மூத்த சிறப்பாய்வாளராகப் பணியாற்றிவருகிறார். இவர் தொடக்கப்பள்ளிகளுக்கான 2015 பாடத்திட்டத்தையும் அதன்தொடர்பான பயிற்றுவளங்களையும் வடிவமைக்கும் முன்னணி அதிகாரிகளுள் ஒருவராக இருக்கிறார். 11-ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டிலும் பிறதளங்களிலும் தமிழ்மொழிக் கல்வி தொடர்பாகவும் பயிற்றுவளங்கள் தொடர்பாகவும் பகிர்ந்துகொண்டுள்ளார். இதற்குமுன் சிங்னான் தொடக்கப்பள்ளியில் நற்குணமும் குடியியல் கல்விக்குமான துறைத்தலைவராகப் (HOD/CCE) பணியாற்றியுள்ளார். இவர் தொடக்கப்பள்ளிகளிலும் உயர்நிலைப்பள்ளியிலும் 30 ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணிபுரிந்த அனுபவமுமிக்கவர்.

This sharing session will enable parents to gain an understanding of the new primary curriculum, and how it facilitates their children’s learning of Tamil. The workshop will specifically focus on how songs can be effectively used in the teaching and learning of Tamil to young children. Speakers will focus on how songs can be used to improve children’s vocabulary skills, pronunciation, sentence structure and language use. Parents will also be able to gather ideas on how they can select suitable songs, teach values and develop their child’s interest in using Tamil in a fun and joyful manner.
இந்தப் பகிர்வரங்கில் புதிய தொடக்கப்பள்ளித் தமிழ்மொழிப் பாடநூல்களும் பயிற்றுவளங்களும் எவ்வாறு வகுப்பறையில் பிள்ளைகளின் கற்றல் மேம்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மொழி கற்றலுக்குப் பயன்முனைப்புமிக்க வகையில் எவ்வாறு துணைபுரியலாம் என்பதற்கான வழிவகைகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம். குறிப்பாகத், தமிழ்மொழியைப் பிள்ளைகளுக்குக் கற்பிப்பதில் தமிழ்ப்பாடல்கள் எவ்வாறு துணைபுரிகின்றன என்பதை அறிந்துகொள்ளலாம். பிள்ளைகள் தமிழ்மொழியையும் பண்புநெறிகளையும் மகிழ்வூட்டும் வகையில் கற்பதற்குப் பாடல்கள் பெருந்துணைபுரிகின்றன. பிள்ளைகளை எளிதில் ஈர்க்கக்கூடிய சிறுவர் பாடல்கள் அவர்களின் மொழி கற்றலில் விரும்பத்தக்க விளைவுகளை அடையச் செய்யும். பாலர்பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட பாடங்களில் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பாடல்களின்வழி மாணவர்களிடத்தே சொல்வளப்பெருக்கம், உச்சரிப்பு, மொழியமைப்பு, மொழிப்பயன்பாடு ஆகியவை எவ்வாறு வளர்க்கப்படுகின்றன என்பதையும் இப்பகிர்வின் முடிவில் அறிந்துகொள்ளலாம்.