Learning Tamil Through Fun-Filled Activities
மகிழ்வூட்டும் நடவடிக்கைகள்வழித்தமிழ் கற்றல்
SCHOOL / ORGANISATION
PCF Sparkletots Preschool @ Teck Ghee Blk 466 (KN)

PCF Sparkletots Preschool @ Teck Ghee Blk 466 engages children in learning the Tamil Language through Engaging Activities, Music & Drama, all in the hope of inculcating a love for learning their Mother Tongue Language.

Children develop the joy of learning Tamil through poems, songs, role-play, language activities and projects. Classroom activities such as Show & Tell, provides opportunities for children to develop their confidence and eloquence through hands-on experiences that facilitates authentic learning. The activities in the learning centres also develop critical thinking and self-discovery skills. Sparkletots also engages parents and children in the celebration of festivals and home activities that foster a positive home-school partnership.
புளோக் 466 தெக் கீ- வட்டாரத்தில் இயங்கும் மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம் ஸ்பார்கல்டாட்ஸ் பாலர் பள்ளி, தமிழ்மொழி கற்றலில் பிள்ளைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. பிள்ளைகள் தமிழ்மொழியை மகிழ்வுடன் கற்பதற்காகப் பாடல்கள், பாத்திரமேற்று நடித்தல், மொழி நடவடிக்கைகள், திட்டவேலைகள் முதலானவற்றில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ‘பொருள் காட்டிப் பேசுதல்’, செயல்முறைக்கற்றல் ஆகிய நடவடிக்கைகளின்வழியே பிள்ளைகள் தமிழைத் தன்னம்பிக்கையுடனும் சரளமாகவும் பேசுவதற்கான திறன்களைப் பெறுகிறார்கள்.

கற்றல் நிலையங்களிலுள்ள நடவடிக்கைகளின்வழியே பிள்ளைகளின் நுண்ணாய்வுச் சிந்தனையும் சுயமாகக் கண்டறியும் திறனும் வளர்க்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பள்ளியில் நடைபெறும் பல்வேறு கொண்டாட்டங்களில் பெற்றோர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மேலும், பெற்றோரும் பிள்ளைகளும் இணைந்து மேற்கொள்ளும் வகையில் நடத்தப்படும் நடவடிக்கைகளின்வழியே சுமூகமான இல்லம்-பள்ளிப் பங்காளித்துவம் வளர்க்கப்படுகிறது.