Learning Tamil Through Traditional Activities
பாரம்பரிய நடவடிக்கைகளின்வழித் தமிழ் கற்றல்
SCHOOL / ORGANISATION
PCF Sparkletots Preschool @Yio Chu Kang Blk 644 (KN)

Tamil Culture can be promoted when children are taught by innovative teaching strategies. One such innovative practice is to infuse culture into the curriculum. Riding on that belief, PCF Sparkletots Preschool @Yio Chu Kang Blk 644 (KN) develops children’s interest and love of Tamil language. Children are exposed to an array of activities with tradition as a focus. To inject joy into children’s learning, teachers incorporate traditional games, activities and rhymes during lessons. Traditional elements from the past have also been incorporated. Through these activities, children develope greater interest in learning and speaking the Tamil language and look forward to attending Tamil lessons every day.
புளோக் 644 இயோ சூ காங் வட்டாரத்தில் இயங்கும் மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம் ஸ்பார்கல்டாட்ஸ் பாலர் பள்ளி, தமிழ்ப் பண்பாட்டை வளர்ப்பதற்கும் தமிழ்மொழி கற்றலில் பிள்ளைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும் புத்தாக்கமிகு கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளை இணைத்துக் கொண்டு பிள்ளைகளைப் பண்பாடு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்திவருகிறது.

பாரம்பரிய விளையாட்டுகள், பாடல்கள், நாடகங்கள் முதலியவை பிள்ளைகளின் மகிழ்ச்சியான தமிழ்மொழி கற்றலுக்குத் துணைபுரிகின்றன. பிள்ளைகள் விரும்பித் தமிழைக் கற்பதற்கும் இவை வழிவகுக்கின்றன. பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் தமிழ்மொழி படிப்பதற்கும் ஆவலோடு வகுப்பிற்கு வருவதற்கும் இவை தூண்டுகோலாக அமைகின்றன.