Snap the Characters Away
Snap – விளையாடிக் கற்போம்
SCHOOL / ORGANISATION
Bedok Green Primary School
பிடோக் கிரீன் தொடக்கப்பள்ளி

Bedok Green Primary believes that joyful learning leads to successful language acquisition. Joyful learning encompasses student involvement, teacher-pupil interaction, ownership in learning and fun-filled activities.

In line with these principles, our Tamil Department conceived the idea of a ‘Snap’ game based on the traditional game and tweaked it to cater to the needs of our Tamil students. This game was developed after a pilot study was conducted with the Primary 1 students. Teachers prepared the game to suit students of different abilities and levels. Through this game, students will develop their language skills and besides gaining academic knowledge, will also learn skills such as agility, concentration and oral interaction. They also get the chance to celebrate success in their language progression.
மகிழ்வூட்டும் கற்றலே மாணவர்களின் நிலையான மொழி கற்றலுக்கு வழி வகுக்கும் என்பது பிடோக் கிரீன் மகிழ்வூட்டும் கற்றலே மாணவர்களின் நிலையான மொழி கற்றலுக்கு வழி வகுக்கும் என்பது பிடோக் கிரீன் தொடக்கப்பள்ளியின் நம்பிக்கையாகும். மாணவர்களது ஈடுபாடு, ஆசிரியர் மாணவர்க்கிடையே கலந்துரையாடல், சுயமாகக் கற்றலில் பொறுப்புணர்வு, மகிழ்வூட்டும் நடவடிக்கைகள் முதலிய கூறுகளைக் கொண்டமைந்ததே மகிழ்வூட்டும் கற்றல். இக்கோட்பாட்டின்வழிப் பிடோக் கிரீன் தொடக்கப்பள்ளியின் தமிழ்ப்பிரிவு ‘ஸ்னெப்’(Snap)_ - என்னும் உத்திமுறையைப் பயன்படுத்தித் தமிழ் எழுத்துகளை எளிதில் கற்க விளையாட்டு ஒன்றை உருவாக்கியது. தொடக்கநிலை ஒன்றில் பயிலும் மாணவர்களுக்கு இவ்விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு, மாணவர்களது வேறுபட்ட கற்றல் நிலைக்கும் திறனுக்கும் ஏற்ப இவ்விளையாட்டுச் சிறிது மாற்றியமைக்கப்பட்டது.

இவ்விளையாட்டின்வழி மாணவர்கள், தமிழ் எழுத்துகளை அடையாளங்கண்டு எளிதில் மனத்தில் பதிய வைத்துக் கொண்டனர். மேலும், தமிழ் எழுத்தைச் சரியாக உச்சரிக்கவும் கற்றுக்கொண்டனர். உயிர் எழுத்துகளுக்கும் உயிர்மெய் எழுத்துகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பையும் உணர்ந்து கொண்டனர். இவ்விளையாட்டு, தமிழ் நெடுங்கணக்கு முறையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் வழிசெய்தது.

இவ்விளையாட்டைப் பற்றியும் அது மாணவர்களது மொழியாற்றலை வளர்ப்பதற்கு எங்ஙனம் உதவியது என்பன போன்ற கூடுதல் தகவல்களையும் இக்கண்காட்சிக்கூடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.