Tamil Language and Promotion Committee
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு
SCHOOL / ORGANISATION
Tamil Language and Promotion Committee
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு

The Tamil Language Learning and Promotion Committee (TLLPC) aims to provide support for Tamil community organisations in promoting the use of Tamil Language and culture beyond the classrooms and to support the teaching and learning of the language in schools. This year, the booth will showcase some of the activities that fall under the three key categories – Signature, Flagship and Supported programmes. As part of our Signature programmes, the newly launched mobile app for pre-schoolers aims to motivate students to read and enjoy the language through play. This will be showcased along with other flagship and supported programmes aimed at providing participants with hands-on experience. TLLPC will continue to look out for innovative and creative ways to enthuse and sustain the Tamil community’s interest in promoting Tamil as a living and vibrant language among the young.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு சமூக அமைப்புகளுடன் இணைந்து பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கைகள், தமிழ்மொழியைக் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் துணைபுரிவதோடு மாணவர்கள் தமிழ்மொழியை வகுப்பறைக்கு அப்பாலும் பயன்படுத்த உதவுகின்றன. தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவினது நடவடிக்கைகள் மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. முத்திரைத் திட்டங்கள், உடனிணைவுத் திட்டங்கள், நிதி ஆதரவு வழங்கும் திட்டங்கள் என்பனவே அவையாகும். முத்திரைத் திட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ஈராண்டுகளாகத் தொடர்ந்து பாலர் பள்ளி மாணவர்களுக்கான செயலிகள் அறிமுகம் கண்டுள்ளன. தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் காட்சிக்கூடத்தில் இத்திட்டங்களையொட்டி நடந்தேறிய நிகழ்வுகள் பற்றிய விளக்கங்கள் இடம்பெறும். இளையர்களிடையே தமிழ்மொழியைத் துடிப்புமிக்க மொழியாகவும் வாழும் மொழியாகவும் திகழச்செய்யத் தமிழ்ச் சமூகத்தினர் ஆர்வத்துடனும் முனைப்புடனும் தொடர்ந்து செயலாற்ற வேண்டும். அதை உறுதிசெய்யும் வகையில் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு புத்தாக்கமும் படைப்பாக்கமுமிக்க வழிகளைத் தொடர்ந்து செயற்படுத்தும்.